News February 6, 2025
பெரம்பலூர் : ரூ.34,09,305 மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை

பெரம்பலூர் நகராட்சி திடலில் தொடங்கப்பட்ட 9வது பெரம்பலூர் புத்தகத் திருவிழாவை 5.2.2025 வரை 27,825 நபர்கள் பார்வையிட்டுள்ளனர். இதுவரை ரூ.34,09,305 மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது. பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பிப்ரவரி ஆறாம் தேதியான இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 22, 2025
பெரம்பலூர்: செல்வம் செழிக்க இங்க போங்க!

பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் சிறந்த தளம் ஆகும். இந்த கோயிலுக்குச் செல்வதால் செல்வாக்கு, ஆட்சி அதிகாரம், அஷ்டலட்சுமி கடாட்சம், மற்றும் ஜாதகக் குறைகள் நீங்குதல் போன்ற பலன்கள் கிடைக்கும். குறைகள் நீங்குதல் போன்ற குறிப்பிட்ட பலன்கள் கிடைக்கும். அனைவர்க்கும் இதனை SHARE பண்ணுங்க!
News September 22, 2025
பெரம்பலூர்: 1லட்சம் பனை விதைகள் நடல்

பெரம்பலூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து நடத்தக்கூடிய பனைமரக்காடு திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணியினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, தெரணி கிராமம் அயினாபுரம் சாலையில் தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பனை விதைகளை நட்டனர்.
News September 22, 2025
பெரம்பலூர்: தாசில்தார் லஞ்சம் கேட்டால் இத செய்ங்க!

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது தாசில்தார் அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், பெரம்பலூர் மாவட்ட மக்கள் 04328-296407 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க