News January 2, 2026
பெரம்பலூர்: ரூ.24 கோடிக்கு காய்கள் விற்பனை!

பெரம்பலூர் உழவர் சந்தையில் கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 5,170.64 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனைக்கு வந்துள்ளது. இவைகள் ரூ.24 கோடியே 99 லட்சத்து 61 ஆயிரத்துக்கு விற்பனையாகி உள்ளது. மேலும், 27,444 விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்துள்ளனர். இதுமூலம் 10,34,346 நுகர்வோர்கள் காய்கறிகள் வாங்கி பயனடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News January 2, 2026
பெரம்பலூர்: இலவச ஓட்டுநர் பயிற்சி

பெரம்பலூர் மாவட்ட மக்களே, 2 மற்றும் 4 சக்கர வாகன பயிற்சி வகுப்பில் சேர, பணம் அதிகமாக செலவாகிறதா? இனி அந்த கவலையில்லை. தமிழக அரசின் TN skills என்ற இணையத்தளத்தில், பொதுமக்களுக்கு இலவசமாக வாகன பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த <
News January 2, 2026
பெரம்பலூர்: சான்றிதழ் தொலைந்துவிட்டதா? Don’t Worry

பெரம்பலூர் மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <
News January 2, 2026
பெரம்பலூர் கலெக்டர் கலந்தாய்வுக் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் செயல்படும், பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் வாயிலாக, குழந்தை திருமணம் இல்லாத மாவட்டத்தை உருவாக்குவோம் என்ற தலைப்பில் மாவட்ட, வட்ட, கிராம அளவிலான குழந்தை திருமண தடுப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான கலந்தாய்வு கூட்டம் ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமையில் நடைபெற்றது.


