News March 21, 2024
பெரம்பலூர்: முதியோர்கள் கவனத்திற்கு!

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள்(85 வயதிற்கு மேற்பட்ட) மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News May 7, 2025
இனி APPல அரசு அலுவலர்களிடம் புகார் அளிக்கலாம்

பெரம்பலூர் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால் அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியாக் செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகளையும் புகார்களையும் மனுவாக அளிக்கலாம். செல்போனில் TN CM HELPLINE என்ற APP-யை பதிவிறக்கம் செய்து புகார் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள்.உங்கள் பகுதியினருக்கும் Share செய்து பயனடையுங்கள்.
News May 7, 2025
வரகூர்: 70 ஆடுகளை திருடியவர்கள் கைது

மங்களமேடு அருகே உள்ள வடக்கலூர் கத்தாழை மேடு கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது ஆட்டுப்பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 70 ஆடுகள் கடந்த 18ஆம் தேதி காணாமல் போனது. இதுகுறித்து கருப்பையா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த இளங்கோவன், பிரபு ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
News May 7, 2025
பணியாளர்களுக்கு பரிசு வழங்கிய ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் ஊராட்சியில் இன்று (மே.01) கிராம சபை கூட்டம் நடைபெற்றது.பின்பு தொழிலாளர் தினத்தை முன்னிட்டு எளம்பலூர் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களின் பணிகளை பாராட்டி, மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் கதர் ஆடை அணிவித்து, பரிசு வழங்கி சிறப்பித்தார்.