News August 12, 2025
பெரம்பலூர்: முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தொடக்கம்

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை சார்பில் வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள் இல்லத்திற்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்கும் திட்டமான முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தினை காணொளி வாயிலாக முதலமைச்சர் துவங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, பெரம்பலூர் நகராட்சி துறைமங்கலம் பகுதியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார். அப்போது அவருடன் மாவட்ட ஆட்சியர் உடனிருந்தார்.
Similar News
News August 13, 2025
அனைத்து அரசு பள்ளிகளிலும் குடற்புழு நீக்க நாள் விழிப்புணர்வு

பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் நேற்று (ஆக.12) துவக்கி வைத்தார். கடந்த இரண்டு நாட்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
News August 13, 2025
பெரம்பலூர்: தேர்வு இல்லை-அரசு வேலை!

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரபப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் இங்கே <
News August 13, 2025
பெரம்பலூர்: விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் கைது

பாடாலூர் சந்தைப்பேட்டை அருகே கடந்த மாதம் 31ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த, நம்பு குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ரங்கராஜ் (63) மீது கனரக வாகனம் மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்று விட்டனர். பின் சிசிடிவி கேமரா மூலம் போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து கள்ளக்குறிச்சி மொகலா கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் (23) என்பவரை நேற்று முன்தினம் (ஆக.11) கைது செய்தனர்.