News October 27, 2025
பெரம்பலூர்: மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

பெரம்பலூர், தேனூர் கல்லாங்குத்து பகுதியை சேர்ந்தவர் ரெங்கராஜ் (57) விவசாயி, இவர் நேற்று இரவு வயலில் மின் மோட்டார் பெட்டியில் பழுதான ஒயரை சரி செய்ய முயன்றார். அப்போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரெங்கராஜ் உடலை கைப் பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 28, 2026
பெரம்பலூர்: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

பெரம்பலூர் மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News January 28, 2026
பெரம்பலூர்: டாஸ்மாக் கடை மூட உத்தராவது!

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக்கின் அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும், வடலூர் ராமலிங்கர் நினைவு நாளினை முன்னிட்டு வரும் பிப்.1-ஆம் தேதி ஞாயிற்று கிழமை அன்று ஒருநாள் மட்டும் உலர்தினமாக விடுமுறை அறிவிக்கப்படுகிறது என, ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
News January 27, 2026
பெரம்பலூர்: ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

பெரம்பலூர் மக்களே, கலைஞர் உரிமை தொகை ரூ.1000 வரலையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. <


