News September 11, 2025
பெரம்பலூர்: மின்சாரம் தாக்கி பெண் விவசாயி உயிரிழப்பு

பெரம்பலூர் மாவட்டம் நெடுவாசல் பகுதியைச் சேர்ந்த விவசாயி ரேவதி (35) என்பவர் தனது தாயுடன் சோழப் பயிருக்கு பூச்சி மருந்து அடிப்பதற்காக வயலுக்கு சென்றுள்ளார். அப்போது அறுந்து கிடந்த மின்கம்பியை தனது இடது காலால் மிதித்ததில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News September 11, 2025
பெரம்பலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (செப்.10) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 10, 2025
பெரம்பலூர் மக்களே இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

உங்கள் Bank Account-யில் திடீரென்று பணம் காணாமல் போகிறதா? போலி வங்கி லிங்க், யூபிஐ, ரிவார்டு மெசேஜ்கள், போலி வேலை வாய்ப்பு, ஷாப்பிங் செய்ய ஆசைப்பட்டு பணத்தை இழந்தால் மோசடியின் ஸ்கிரீன்ஷாட், SMS, E-mail போன்ற ஆதாரங்களை வைத்து, <
News September 10, 2025
பெரம்பலூர்: புதிய பேருந்து சேவை தொடக்கம்

இன்று திட்டக்குடி, வயலப்பாடி, புதுவேட்டக்குடி, துங்கபுரம், அரியலூர், கீழப்பழூர், திருமானூர், திருவையாறு வழியாக தஞ்சாவூர் வரை செல்லும் புதிய அரசு போக்குவரத்து கழக பேருந்து வசதியினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொழிலாளர் நலன் துறை அமைச்சர் கணேசன் அவர்களுடன் சிறுபாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் புதிய பேருந்து சேவையை துவங்கி வைத்தார்.