News January 13, 2026

பெரம்பலூர் மாவட்ட MLA எண்கள்!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி) மற்றும் குன்னம் என இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த இரண்டு சட்டமன்றத் தொகுதிகளின் உறுப்பினர்களின் தொடர்பு எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியை இங்கு அறிந்துகொள்ளலாம்.
1.பெரம்பலூர் (தனி) – எம். பிரபாகரன் – 9786660160 – mlaperambalur@tn.gov.in
2.குன்னம் – எஸ்.எஸ்.சிவசங்கர் – 9443142600 – mlakunnam@tn.gov.in
இதனை உங்களது உறவினர்களுக்கும் SHARE பண்ணுங்க…

Similar News

News January 23, 2026

பெரம்பலூர்: சாலை விபத்தில் விவசாயி பலி

image

நாட்டார்மங்கலம் கிராமத்தில் விவசாயம் செய்து வந்தவர் விவசாயி சிவமூர்த்தி (30). சம்பவத்தன்று சிவமூர்த்தி, தனது வயலுக்கு சென்ற மோட்டார் சைக்கிளும், அதே பகுதியைச் சேர்ந்த செல்வி (42), தனது தங்கை மகள் சங்கீதாவுடன் (15) சென்ற மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது. இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிவமூர்த்தி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

News January 23, 2026

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில், உணவுப்பொருள் வழங்கல் சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை (ஜன.24) நடைபெறவுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் குரும்பலூர், பெரியவடகரை, திருமாந்துறை, மேலமாத்தூர் ஆகிய ஊர்களில் வரும் நாளை (ஜன.24) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகள் சம்மந்தமான குறைகளைத் தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 22, 2026

பெரம்பலூர்: வீட்டில் செல்வம் செழிக்க வழி!

image

பெரம்பலூரில் அமைந்துள்ள மதனகோபால சுவாமி கோயில் பக்தர்களின் துயர் தீர்க்கும் புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் அமைந்து அருள்பாலித்து வரும் முலவரான மதனகோபால சுவாமிக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் தீராத கடன் தொல்லைகள் நீங்கி, இல்லத்தில் செல்வம் செழிக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இத்தகவலை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!