News December 25, 2025
பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் அதிரடி

பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி கிராமத்தைச் சேர்ந்த மனநல பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் தொந்தரவு மற்றும் கற்பழிப்பு செய்ததாக ராஜீ (55) என்பவர் மீது கடந்த 2022-ம் ஆண்டு கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர் விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி ராஜீக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,00,000 அபராதம் விதித்து, பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் நேற்று தண்டனை வழங்கியது.
Similar News
News December 30, 2025
பெரம்பலூர்: 10th போதும்-போஸ்ட் ஆபிஸில் வேலை!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது அவசியமாகும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News December 30, 2025
பெரம்பலூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டம் வெண்மணி, கூத்தூர், கூடலூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (30-12-2025) மாதந்திர பராமரிப்புபணி நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின் இணைப்பு பெறும் பகுதிகளில் இன்று காலை 9:30 மணி முதல் பராமரிப்பு பணி முடிவடையும் வரை மின்தடை ஏற்படும் என துணை மின்நிலைய செயற்பொறியாளர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 30, 2025
பெரம்பலூர்: ஜல்லிக்கட்டுநடத்துவது குறித்து ஆலோசனை

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில், 2026 பொங்கல் தினத்தை முன்னிட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தும் போது, கடைபிடிக்க வேண்டிய அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து இன்று (29.12.25) அலுவலர்கள் மற்றும் விழா குழுவினருக்கு விளக்கும் வகையிலான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடத்தப்பட்டது.


