News November 18, 2024
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் 01.01.2000க்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும் 01.01.2000க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறந்த பதிவுகளுக்கும், குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்று பெற 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள நகராட்சி அல்லது வட்டாட்சியர், பேரூராட்சி அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் கலெக்டர் அறிவித்துள்ளார். SHARE IT.
Similar News
News November 19, 2024
பெரம்பலூர் மக்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது பெற தகுதியான நபர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று உரிய சான்றிதழ்களுடன் 29.11.2024 க்குள் மாவட்ட ஆட்சியரகம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து பயனடைய வேண்டுமென கலெக்டர் நேற்று தகவல் அளித்தார்.
News November 19, 2024
பெரம்பலூரில் 306 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நேற்று (18.11.2024) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார். இந்த கூட்டத்தில் 306 மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. பல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
News November 18, 2024
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
“உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம் பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் 20.11.2024 அன்று நடைபெறவுள்ளது. எனவே கிராம பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ள வரும் மாவட்ட நிலை அலுவலரிடம் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் (ம) தங்கள் கிராமத்திற்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளையும் மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.