News August 14, 2024
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

குறு சிறு (ம) நடுத்தர தொழில் பிரிவுகளுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் 19.8.20 24 முதல் 06.09.2024 வரை தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக திருச்சி கிளை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. புதிய தொழில் முனைவோர் தொழிலதிபர்கள் வருகை தந்து தொழில் கடன் மற்றும் அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் தகவலுக்கு 0431- 2460498, 9443110899 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
Similar News
News November 11, 2025
பெரம்பலூர்: 356 மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் மிருணாளினி தலைமையில் இன்று (நவ.10) மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 356 மனுக்களை பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர். இக்கூட்டத்தில் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
News November 10, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண் (ம) திருமணமாகாத மகள்கள் இலவச தையல் இயந்திரம் வேண்டி விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரம் பெற அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் 30.11.2025–குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார்.
News November 10, 2025
பெரம்பலூர் மக்களே! உடனடி தீர்வு வேண்டுமா?

பெரம்பலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <


