News April 24, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் 1,299 சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான தேர்வு நடைபெற உள்ளது. மேலும் விவரங்களை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டல் மையத்தின் சார்பில் பயிற்சி வகுப்புகள் வரும் 30ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது என ஆட்சியர் அறிவித்துள்ளார். SHARE IT

Similar News

News August 9, 2025

பெரம்பலூர்: ரூ.1,42,400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.10) கடைசி நாளாகும். இதனை வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News August 9, 2025

பெரம்பலூரில் வாகன ஏலம்! போலீசார் அறிவிப்பு!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் போலீசாரால் கைப்பற்றப்பட்ட 43 வாகனங்கள் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. 40 இருசக்கர வாகனங்கள், 1 நான்கு சக்கர வாகனம் மற்றும் 2 ஆறு சக்கர வாகனங்கள் என மொத்தம் 43 வாகனங்கள் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி காலை 10 மணிக்கு பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி பொது ஏலம் விடப்படவுள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News August 9, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடு படும் ஆர்வலர்களுக்கு தமிழ் செம்மல் விருது வழங்கப்பட உள்ளதால் தகுதி உடையவர்கள் 29.8.25-ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். விண்ணப்பங்களை www.tamilvalarchithurai.com பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் (அ) தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!