News January 1, 2026
பெரம்பலூர் மாவட்டம் பற்றி ஓர் பார்வை!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா, சட்டமன்ற தொகுதிகள், பேருராட்சிகள் என்னென்ன இருக்கின்றது என உங்களுக்கு தெரியுமா?
✅4 தாலுகா
1.பெரம்பலூர்
2.குன்னம்
3.வேப்பந்தட்டை
4.ஆலத்தூர்
✅2 சட்டமன்ற தொகுதி
1.பெரம்பலூர் (தனி)
2.குன்னம்
✅1 நாடாளுமன்ற தொகுதி
1.பெரம்பலூர்
✅4 பேரூராட்சிகள்
1.அரும்பாவூர்
2.இலப்பைகுடிக்காடு
3.குரும்பலூர்
4.பூலாம்பாடி
இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 3, 2026
பெரம்பலூர்: கழிவறை கட்ட ரூ.12,000 ஊக்கத் தொகை!

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), அனைத்து கிராமப் புற குடும்பங்களுக்கும் கழிவறை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற உங்கள் கிராம ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இதனை அனைவருக்கும் SHARE செய்து அவர்களும் பயனடைய உதவுங்கள்.!
News January 3, 2026
பெரம்பலூர்: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்!
News January 3, 2026
பெரம்பலூர்: படுக்கையிலிருந்து விழுந்த பெண் பலி!

குன்னம் தாலுகா, நமையூர் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் மஞ்சுளா (49). இவர் சிறு வயதிலிருந்தே சற்று மனநலம் குன்றியவர் என கூறப்படுகிறது. ஏற்கனவே பெற்றோர் இறந்த காரணத்தால் மஞ்சுளா, அவரது தம்பி செந்தில்குமார் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை படுக்கையிலிருந்து மஞ்சுளா தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.


