News December 21, 2024
பெரம்பலூர் மாவட்டத்தில் 9 பேர் தேர்வு

தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வில் மாநில அளவில் வெற்றி பெற்றவர்கள் விவரம் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் ஒன்பது பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் தனியார் பள்ளியில் மூன்று பேரும், அரசுப் பள்ளியில் ஆறு பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Similar News
News March 3, 2026
பெரம்பலூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News March 3, 2026
பெரம்பலூர்: தேர்தல் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி முன்னிலையில் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கான பயிற்சிக்கூட்டம் நடைபெற்றது. இதில், தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள மண்டல அலுவலர்களுக்கு எவ்வாறு பணியில் ஈடுபட வேண்டும், எவ்வாறு விரைவாக செயல்பட வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்டது.
News March 3, 2026
பெரம்பலூர்: 69 பேர் பொதுத்தேர்வு எழுதவில்லை

தமிழகம் முழுவதும் நேற்று 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அரசுப் பொதுத்தேர்வு நடைபெற்றது. அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 36 தேர்வு மையங்களில் 82 பள்ளிகளைச் சேர்ந்த 7,276 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், 7207 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். 69 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


