News October 10, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் கடையில் பணிபுரிய வாய்ப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலை கடைகளில் உள்ள விற்பனையாளர் (Salesman), கட்டுநர்கள் (Packer) ஆகிய 31 பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. இப்பணிக்கு www.drbpblr.net என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் நவ.7ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யவும்.

Similar News

News December 10, 2025

பெரம்பலூரில் நாளை சிறப்பு முகாம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், வீட்டுப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில், அவர்களை நலவாரியத்தில் இணைக்கும் சிறப்பு முகாம், நாளை பெரம்பலூர் எம்.ஜி.ஆர். விளையாட்டு திடல் அருகில், ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது என தொழிலாளர் உதவி ஆணையர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

News December 10, 2025

பெரம்பலூர்: மகளிர் சங்கத்தில் வேலை வாய்ப்பு

image

கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு, அலுவல் சாரா உறுப்பினர்களாக ஒரு கவுரவ செயலாளர், ஒரு கௌரவ இணை செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் தேவைப்படுகின்றனர். விருப்பமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை ஆட்சியர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 10, 2025

பெரம்பலூரில் இளைஞர் தற்கொலை

image

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பெரியவடகரை இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஜெனித்குமார் (31). இவருக்கும் இவரது மனைவி பாலஅபிராமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஜெனித்குமார் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த கை.களத்தூர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!