News December 14, 2025
பெரம்பலூர்: மாணவர்களுக்கு ரூ.12000 உதவி தொகை

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு மாணவர்கள், பிளஸ் 2 வரை படிக்க உதவி தொகை பெற, தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவி திட்ட தேர்வுகள் நடத்தி, தேர்வு செய்ய உள்ளனர். விண்ணப்பங்களை டிச,15-க்குள் www.dge.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, கட்டண தொகை ரூ.50 அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் டிச.20-க்குள் ஒப்படைக்க அரசு தேர்வு குழு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 19, 2025
பெரம்பலூர்: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

பெரம்பலூர் மக்களே, நமது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு, நமக்கு PAN அட்டை தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிச.31 ஆம் தேதிக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் நேரடியாக எங்கும் அலைய வேண்டியதில்லை. <
News December 19, 2025
பெரம்பலூர்: 8th போதும் தேர்தல் ஆணையத்தில் வேலை

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
1. வகை: தமிழக அரசு
2. வயது: 18-37
3. சம்பளம்: Rs.15,700 – Rs.50,000
4. கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி!
5. கடைசி தேதி: 02.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 19, 2025
பெரம்பலூா்: சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம்

பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சமரச மையத்தில், பழங்குடியின சமுதாய மக்களுக்கான சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணா்வு முகாம் நேற்று (18/12/25) நடைபெற்றது. இம்முகாமுக்கு தலைமை வகித்து, சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான வி.பத்மநாபன், இந்திய அரசமைப்புச் சட்டத்தில், பழங்குடியின மக்களுக்கென அரசு பல நல்ல திட்டங்களை அமைத்து செயல்படுத்தி வருகிறது என்றார்.


