News June 21, 2024

பெரம்பலூர்: மாணவர்களுக்கு பாராட்டு

image

ஜம்மு காஷ்மீரில் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி அண்மையில் நடை நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்டம் எறையூர் நேரு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் சாய்நிவேஷ் , ஹரிகிருஷ்ணன் மற்றும் உண்டு உறைவிட பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் வெங்கடேசன் ஆகிய 3 பேர் கலந்து கொண்டு வெற்றி பெற்று பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வென்றனர். இவர்களுக்கு பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News

News August 30, 2025

பெரம்பலூர் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியிட மாற்றம் பெற்று புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற சா.அருண்ராஜ் தற்சமயம் மீண்டும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் சார் ஆட்சியராக இருந்த ந.மிருணாளினி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

News August 29, 2025

பெரம்பலூர்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

பெரம்பலூர் மக்களே, முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE IT

News August 29, 2025

பெரம்பலூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வேண்டுமா?

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <>https://tnuwwb.tn.gov.in<<>>/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில், Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!