News September 28, 2025

பெரம்பலூர் மாணவனுக்கு தங்க பதக்கம் வழங்கல்

image

பெரம்பலூர் மாவட்ட பள்ளி அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி 12ம் வகுப்பு மாணவன் செங்குணம் சி.ஆகாஷ் பங்கேற்று உயரம் தாண்டுதலில் முதலிடம் பெற்றார். இம்மாணவனுக்கு (செப்.27) பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் விளையாட்டு துறை சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டு தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.

Similar News

News January 8, 2026

பெரம்பலூர்: சிலிண்டருக்கு கூடுதல் பணமா?

image

பெரம்பலூர் மாவட்ட மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ<> இணையதளத்தில் <<>>புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த ஷேர் பண்ணுங்க!

News January 8, 2026

பெரம்பலூர்: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

image

பெரம்பலூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <>parivahansewas.com<<>> என்ற இணையதளம் மூலமாக மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளம் மூலமாக LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை எளிதாக மேற்கொள்ளலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 8, 2026

பெரம்பலூர்: ஆட்சியர் தொடங்கி வைத்த சுற்றுலா

image

பெரம்பலூர் மாவட்ட இயற்கை மற்றும் காலநிலை மாற்றம் சார்பாக இரண்டு நாள் விழிப்புணர்வு சுற்றுலாவினை இன்று (08-01-2026) மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தொடங்கி வைத்தார். மேலும் முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட பசுமைத் தோழர் ஜாகிர்ஹுசைன், செல்வக்குமார், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் ஏற்பாடு செய்தனர். 50 மாணவ-மாணவிகள், 10 ஆசிரியர்கள் சுற்றுலா சென்றனர்.

error: Content is protected !!