News August 6, 2025
பெரம்பலூர் மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ், தரிசு நிலங்களை மேம்படுத்தி விளை நிலங்களாக மாற்றி கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 6, 2025
பெரம்பலூர்: நாளை பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கள் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் (9.8.2025) அன்று நடைபெற உள்ளது. நொச்சியம், தொண்டமாந்துறை, காடூர் (தெற்கு) கொளத்தூர், (கிழக்கு) ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெற உள்ளது. இதில் உணவு பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என கலெக்டர் இன்று (ஆகஸ்ட் 6) தகவல் தெரிவித்துள்ளார்.
News August 6, 2025
பெரம்பலூர்: BANK லாக்கரில் நகை இருக்கா? கவனம்!

BANK லாக்கரில் நகையை வைக்கும் முன் இதை தெரிஞ்சிக்கோங்க! உங்கள் நகை பற்றிய விவரங்கள் வங்கிக்கு தெரியாது. தீ விபத்து, அல்லது திருட்டு போனால் RBI விதிமுறைப்படி காப்பீட்டு தொகை மட்டுமே வழங்கப்படும். லாக்கரை பொறுத்து ஆண்டுக்கு ரூ.1,500 முதல் 12,000 வரை கட்டணம் செலுத்த வேண்டும். வங்கி விடுமுறை, அரசு விடுமுறையில் லாக்கரில் நகை எடுக்கவோ வைக்கவோ முடியாது. அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்!
News August 6, 2025
பெரம்பலூர்: சிற்றுந்துகள் இயக்க விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் சிற்றுந்திற்கான புதிய விரிவான திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டுள்ள மூன்று புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சந்தேகங்களுக்கு பொதுமக்கள் நேரடியாக பெரம்பலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அருண்ராஜ் இன்று (ஆகஸ்ட் 6) தகவல் தெரிவித்துள்ளார்.