News October 16, 2025
பெரம்பலூர்: போலீஸ் ஜீப் மோதி விவசாயி பலி

பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூரைச் சேர்ந்தவர் விவசாயி ரெங்கராஜ் (55). இவர் அக்.14 இரவு தனது பைக்கில் தாழை நகர் அருகே சென்றபோது, இரவு ரோந்து பணியில் இருந்த அரும்பாவூர் காவல் நிலைய ஏட்டு பிரபு ஓட்டி சென்ற போலீஸ் ஜீப், ரெங்கராஜ் பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் ரெங்கராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News October 16, 2025
பெரம்பலூர்: வருவாய்த்துறை ஊழியர்கள் கண்டனம்

இன்று (16.10.2025) காலை பெரம்பலூர் வருவாய் கோட்டாச்சியர் அலுவலக பணியாளர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்திருந்தனர். இது குறித்து வருவாய் சங்க மாவட்ட பொருளாளர் குமரி ஆனந்தன் கூறுகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தினை உடனே அரசு செயல்படுத்திட வேண்டும் என 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
News October 16, 2025
பெரம்பலூர் மாவட்டத்தில் விசிகவினர் ஆர்ப்பாட்டம்

உச்சநீதிமன்றத்தில் கடந்த 6-ம் தேதி வழக்கு விசாரணையின் போது நீதிபதி பி.ஆர்.கவாய் மீது செருப்பை வீசி அவமதித்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், விசிக கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர்கள் ரத்தினவேல் மற்றும் கலையரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
News October 16, 2025
தேசிய அளவில் பெரம்பலூர் மாவணவர்கள் சாதனை

அகில இந்திய தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவி ஒருவர் மற்றும் இரண்டு மாணவர்களை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி நேற்று (15.10.2025) நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில், மாவட்ட ஆட்சியரை சந்தித்த மாணவ-மாணவிகள் தாங்கள் பெற்ற சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.