News January 7, 2026

பெரம்பலூர்: புதிய காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக அனிதா நேற்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் முன்னுரிமை அளிக்கப்போவதாக அவர் தெரிவித்தார். புதிய எஸ்பி-க்கு காவல்துறை உயர் அலுவலர்களும், பொதுமக்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். SHARE பண்ணுங்க!

Similar News

News February 6, 2026

பெரம்பலூர்: இனி டாக்டர் பீஸ் FREE..!

image

பெரம்பலூர் மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை <>இங்கு கிளிக்<<>> செய்து Install பண்ணுங்க. இதில் மருத்துவர்களிடம் வீடியோ காலில் காய்ச்சல், சளி, தலைவலி, கண்பார்வை, சுகர், பிரசர், கர்ப்பகால ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம். முடிவில் டிஜிட்டல் மருத்து சீட் வழங்கப்படும். இதனால் உங்களுக்கு தேவையில்லாத செலவு குறையும். இந்த அருமையான தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 6, 2026

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூரில் 10வது புத்தகத் திருவிழா 27.02.2026 முதல் 08.03.2026 வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார். மாவட்டம் தோறும் புத்தக திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில், மாவட்ட நிர்வாகமும், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றமும் இணைந்து புதிய பேருந்து நிலையம் அருகில் புத்தகத் திருவிழா நடத்தவுள்ளனர். இத்தகவலை ஷேர் பண்ணுங்க!

News February 6, 2026

பெரம்பலூர்: வேலைவாய்ப்பு – கலெக்டர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள 9 வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணிபுரிந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாத ஊதியம் ரூ.12,000/-வழங்கப்படும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக வந்து 16.02.2026 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!