News August 31, 2025
பெரம்பலூர்: புதிய கலெக்டர் பற்றிய தகவல்கள்!

ந.மிருணாளினி 2001ல் கூட்டுறவுத் துறையில் துணைப்பதிவாளராக பணி நியமனம் பெற்றார். பின்னர் இணைப் பதிவாளராக புதுகை, திருச்சி, கடலூா் ஆகிய மாவட்டங்களிலும், சென்னையில் கூடுதல் பதிவாளராகவும் பணிபுரிந்தார். கடந்த 2023-ல் இந்திய ஆட்சிப் பணிக்கு பதவி உயா்வு பெற்ற இவர், ஸ்ரீபெரும்புதூா் சாா்-ஆட்சியராக பதவி வகித்து, தற்போது பெரம்பலூா் மாவட்டத்தின் புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ளாா். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
Similar News
News September 1, 2025
பெரம்பலூர்: தெருநாய்கள் அச்சுறுத்தலா? உடனே புகார்

தமிழகத்தில் அண்மைக்காலமாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துக் காணப்படுகிறது. மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெரு நாய்கள் கடிக்கு ஆளாகின்றனர். சில நேரங்களின் உயிரிழப்பு கூட ஏற்படுகிறது. இனி தெருக்களில் கூட்டம் கூட்டமாகத் திரியும் தெரு நாய்களை கண்டு அச்சமடையவோ, கவலையோ வேண்டாம். உங்கள் பகுதியில் தெரு நாய்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க 1100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதை SHARE பண்ணுங்க!
News September 1, 2025
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 362 மனுக்கள் வழங்கல்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் மிருணாளினி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (செப்.01) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 362 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு உள்ளிட்ட துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
News September 1, 2025
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 3,789 நபர்கள் பயன்

பெரம்பலூர் மாவட்டத்தில் நலங்காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் வட்டத்திற்கு 1 முகாம் வீதம் மாவட்டத்திலுள்ள நான்கு வட்டத்திற்கும் நான்கு முகாம்கள் இதுவரை நடைபெற்றுள்ளன. நடைபெற்ற நலம்காக்கும் ஸ்டாலின் முகாமில் இதுவரை 3,789 நபர்கள் கலந்து கொண்டு முகமை பயன்படுத்தி உள்ளனர் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.