News September 26, 2025

பெரம்பலூர்: பள்ளி மாணவிகளை கிண்டல் செய்த வாலிபர் கைது

image

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அரும்பாவூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அ.மேட்டூரை சேர்ந்த பள்ளி மாணவிகள் தினந்தோறும் பள்ளிக்குச் செல்வது வழக்கம். அப்போது அதே ஊரைச் சேர்ந்த தங்கதுரை மகன் கௌதமன் மாணவிகளை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் அரும்பாவூர் போலீசார் கொதமணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 1, 2026

பெரம்பலூர்: 2025 மறக்க முடியாத நிகழ்வுகள்

image

பெரம்பலூரில் கடந்த 2025-ம் ஆண்டு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:
1. பெரம்பலூருக்கு வருவேன் என்று ஏமாற்றிய விஜய்
2. சூனியம் வைக்க ரூ.21 லட்சம் அனுப்பியவர் கைது
3. ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன் பிடிக்க முயன்ற இருவர் பலி
4. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மாற்றம்
5. வேப்பந்தட்டை வேத மாரியம்மன் கோயில் தேர் விவகாரம்
உங்கள் பகுதியில் நடைபெற்ற மறக்க முடியாத நிகழ்வுகளை கமெண்ட் பண்ணுங்க!

News January 1, 2026

பெரம்பலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News January 1, 2026

பெரம்பலூர்: சோலார் பம்புசெட் வேண்டுமா?

image

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில், 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு <>உழவன் App<<>> மூலமாக விண்ணப்பித்து, பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அறிய உங்கள் மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகவும். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்க..

error: Content is protected !!