News February 15, 2025

பெரம்பலூர்: பறவைகள் கணக்கெடுப்பு

image

பெரம்பலூர் மாவட்டம் அடைக்கம்பட்டி கிராமத்தில் பெரம்பலூர் ரோட்டராக்ட் சங்கம் சேலம் பறவையியல் கழகம் இணைந்து நடத்திய ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு (GBBC) இன்று (15.02.1024) அடைக்கம்பட்டி கிராமத்தில் உள்ள பெரியஏரியில் நடைபெற்றது. பறவைகள் கணக்கெடுப்பில் அடக்கம் பட்டி கிராம மக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

Similar News

News September 22, 2025

பெரம்பலூர்: 1லட்சம் பனை விதைகள் நடல்

image

பெரம்பலூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து நடத்தக்கூடிய பனைமரக்காடு திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் பணியினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, தெரணி கிராமம் அயினாபுரம் சாலையில் தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பனை விதைகளை நட்டனர்.

News September 22, 2025

பெரம்பலூர்: தாசில்தார் லஞ்சம் கேட்டால் இத செய்ங்க!

image

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது தாசில்தார் அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், பெரம்பலூர் மாவட்ட மக்கள் 04328-296407 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க

News September 22, 2025

பெரம்பலூர்: “தீபாவளிக்கு கூடுதல் பேருந்து இயக்க முடிவு”

image

பெரம்பலூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான சா.சி.சிவசங்கரிடம் கேட்டபோது, “தீபாவளி பண்டிகைக்கு கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகளவில் பேருந்து வசதி இருக்கும். இதைப்பற்றி போக்குவரத்து துறை மேலாண்மை அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தப்படும்.” என்று தெரிவித்தார்.

error: Content is protected !!