News April 6, 2024
பெரம்பலூர்: பதற்றமான சாவடிகள் எண்ணிக்கை வெளியீடு

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 55 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் என எதுவும் இல்லை என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஏப்.19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 27, 2026
பெரம்பலூரில் என்கவுண்டர்! மேலும் 6 பேர் கைது

திருமாந்துறை அருகே பிரபல ரவுடி வெள்ளை காளி மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய ரவுடி கொட்டு ராஜா எனப்படும் அழகுராஜ் என்பவரை போலீசார் கைது செய்து, அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை கைப்பற்றுவதற்காக அழைத்துச் சென்றனர். அப்போது தப்பி ஓட முயன்றதால், கொட்டு ராஜா போலீசாரால் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார். இந்நிலையில், வெள்ளை காளியை கொல்ல முயன்ற சம்பவத்தில் மேலும் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
News January 27, 2026
பெரம்பலூர்: பேருந்து – கார் மோதி விபத்து; 2 பேர் பலி

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே, சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அரசு பேருந்து முன்னாள் சென்ற காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில், காரில் பயணித்த ராஜபாளையத்தைச் சேர்ந்த ஆனந்தமுத்து (50) மற்றும் ஹரிஹரன் (36) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
News January 27, 2026
பெரம்பலூர் ஆட்சியருக்கு ஆளுநர் ரவி பாராட்டு

சென்னை ராஜ்பவனில் இன்று (26.1.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் படை வீரர்களின் நலனை காத்திடும் வகையில், கொடிநாள் நிதி திரட்டுவதில் மாநிலத்தில் 3-ஆம் இடம் பிடித்த பெரம்பலூர் மாவட்டத்திற்காக, தமிழ்நாடு ஆளுநர் ரவி, அரசு தலைமை செயலாளர் முருகானந்தம் முன்னிலையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினிக்கு கேடயம் வழங்கிப் பாராட்டினார்.


