News August 16, 2024
பெரம்பலூர்: நண்பரின் கடைக்கு தீ வைத்த நபர்

கல்லை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் டூவீலர் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை அந்த கடை தீ பற்றி எரிந்தது. இதில், கடையில் உள்ள பொருட்கள் தீயில் கருகின. வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வல்லரசு (30) ,அவரது நண்பரான தமிழ்செல்வன் ஆகியோர் கடையில் தீ வைத்தது தெரியவந்தது. தமிழ்செல்வனை கைது செய்த போலீசார் வல்லரசுவை தேடி வருகின்றனர்.
Similar News
News November 6, 2025
பெரம்பலூர்: தேர்வு இல்லை-அரசு வேலை!

அணுசக்தித் துறையில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. காலியிடங்கள்: 405
3. கல்வித் தகுதி: 10th & ITI Pass in respective trades
4.சம்பளம்: ரூ.9,600 – ரூ.10,560
5. கடைசி நாள்: 15.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…
News November 6, 2025
பெரம்பலூர்: புதிய முதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்பேற்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடம் காலியாக இருந்த நிலையில், நேற்று (நவ.05) திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பணியிட மாறுதலில் பெரம்பலூரின் புதிய முதன்மைக் கல்வி அலுவராக சுவாமி முத்தழகன் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் அரியலூர் மாவட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலராக பணியாற்றி பதவி உயர்வில் திருவண்ணாமலை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 6, 2025
பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம்

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் இன்று (நவ.05) மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் கலந்து கொண்ட காவல் கண்காணிப்பாளர், பொதுமக்களிடம் நேரடியாக மனுவைப் பெற்றார். இந்த சிறப்பு மனு முகாம் மூலம் 13 மனுக்கள் பெற்றப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது.


