News June 4, 2024

பெரம்பலூர் தொகுதி வெற்றி முகம் திமுக மகளிர் அணி கொண்டாட்டம்

image

பெரம்பலூர் மக்களவை தேர்தல் முடிவு விவரம் அறிவிக்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கே.என்.அருண் நேரு இரண்டாம் சுற்று முடிவில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இதை தொட்டியம் திமுக மகளிர் அணியினர் கொண்டாடி வருகின்றனர். தொட்டியம் யூனியன் சேர்மன் கிருஷ்ணவேணி தலைமையில் மகளிர் அணியினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடினர்.

Similar News

News August 21, 2025

திருச்சியில் எடப்பாடி பழனிசாமி 3 நாள் சுற்றுப்பயணம்

image

திருச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி திருச்சி மாவட்டத்தில் 23-ம் தேதி திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, லால்குடி பகுதியிலும், 24-ம் தேதி மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறியிலும், 25-ம் தேதி மணப்பாறை, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம் தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து பேசுகிறார்.

News August 21, 2025

திருச்சியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கலந்தாய்வு கூட்டம்

image

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் வரும் ஆக.,27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் 29-ம் தேதி நடைபெற உள்ள விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க, காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆணையர்கள், ஆணையர்கள் ஆகியோருடன் மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

News August 21, 2025

திருச்சி மக்களே சொந்த தொழில் தொடங்க ஆசையா?

image

திருச்சி மக்களே சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். இதற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு<> www.msmeonline.tn.gov.in என்ற<<>> இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். Business ஆரம்பிக்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!