News August 7, 2025

பெரம்பலூர்: திருக்குறள் பயிற்சி வகுப்பு அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் லாடபுரத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியிலும், பாடாலூரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும், வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், (9.8.2025) முதல் வாரந்தோறும் சனிக்கிழமையில் நடைபெறவுள்ளது. முற்பகல் 10 மணி முதல் 12.30 மணி வரை 30 வாரங்கள் நடைபெற உள்ளதால் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 7, 2025

பெரம்பலூர்: அரசு பேருந்துகள் குறித்த புகார் எண்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உங்கள் பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து புகார்/ குறைகளை கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் (0435- 2403724-26) தெரிவிக்கலாம். இதில் காலதாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர், நடத்துநர் பயணிகளிடம் நடத்தை விதிகளை மீறி செயல்படுவது, நேரத்திற்கு வராமல் இருப்பது உள்ளிட்டவை குறித்து புகார் தெரிவிக்கலாம். இதனை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 7, 2025

பெரம்பலூர் : இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் (ஆண், பெண்) ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு பெற , பெரம்பலூர் சமூக நல அலுவலரை அணுகவும். SHARE பண்ணுங்க!

News August 7, 2025

ரூ.8,40,000 இழப்பீடு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு

image

பெரம்பலூர் மாவட்டம் பில்லங்குளம் ஊராட்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஜெயராமன், தமிழ்செல்வி,செந்தில்வேலன், வேல்முருகன், அருள்மணி ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. கலைஞர் கனவு இல்லத்தில் வீடு கட்டியவர்கள் பெயரை இதில் சேர்த்து ரூ.8,40,000 முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து ஊழல் தடுப்பு, கண்காணிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!