News April 27, 2024
பெரம்பலூர்: தந்தையை கொன்ற மகன் – எஸ்ஐ மீது நடவடிக்கை

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்தவர் குழந்தைவேலு. இவரது மகன் சக்திவேல் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சொத்து தகராறில் தந்தை என பாராமல் குழந்தைவேலுவை அடித்துக்கொன்றார் . இது குறித்த வீடியோ வெளியானதை தொடர்ந்து வழக்கு போடாமல் காலம் கடத்தியதாக கைகளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனிச்சாமியை, ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News March 6, 2026
பெரம்பலுர் மக்களே… இன்று இதை மறக்காதீங்க!

பெரம்பலுர் மக்களே இன்று காலை 8.24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடைந்துள்ளார். எனவே இன்று மாலை 5.30 மணிக்குள் அருகிலுள்ள கோயிலிக்கு சென்று சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டு சாப்பாடு, தண்ணீர், பழச்சாறு, செருப்பு, குடை ஆகியவற்றை தானமாக வழங்கினால் வாழ்வில் சுபிட்சம் உண்டாகும் என நம்பிக்கை! மறக்காமல் இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News March 6, 2026
பெரம்பலூர்: இனி வாட்ஸ்ஆப் மூலம் சான்றிதழ்கள்!

பெரம்பலூர் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை தெரிந்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News March 6, 2026
பெரம்பலூர்: திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்!

குன்னம் தொகுதி, செந்துறை மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த 20-கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரின் முன்னிலையில் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் திமுக செந்துறை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் வழக்கறிஞர் பொன்.செல்வம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


