News October 22, 2025
பெரம்பலூர்: டிகிரி போதும்..அரசு வேலை!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், IPPB வங்கியில் 348 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. கடைசி தேதி : 29.10.2025
4. சம்பளம்: ரூ.30,000
5. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
7. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க
Similar News
News October 23, 2025
பெரம்பலூர்: வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு!

பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் (அக்.24) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் மாவட்டத்தில் 10,12-ம் வகுப்பு, ITI, டிப்ளமோ, பட்டப் படிப்பு முடித்த வேலை வாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலரும் முகாமில் கலந்து கொள்ளலாம். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு, வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News October 23, 2025
பெரம்பலுர்: உதவித்தொகைக்கு கால அவகாசம் நீட்டிப்பு!

பெரம்பலூர், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் யாசஸ்வி கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற மாணவர்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்க (நவம்பர் 15) வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
News October 22, 2025
மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம்

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் இன்று (அக்.22) மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்ட காவல் கண்காணிப்பாளர், பொதுமக்களிடம் நேரடியாக மனுவைப் பெற்றுக்கொண்டார். இந்த சிறப்பு மனு முகாம் மூலம் 11 மனுக்கள் பெற்றப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.