News January 8, 2026
பெரம்பலூர்: செல்வம் செழிக்க இங்க போங்க!

பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் பகுதியில் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் அமைத்துள்ளது. இக்கோயிலுக்கு சென்று வழிபடுவதால் செல்வம், குடும்ப நலன், திருமணம் கைகூடுதல், நோய்கள் நீங்குதல் போன்ற பல நன்மைகள் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். குறிப்பாக, கடன் தொல்லை நீங்கி செல்வம் செழிக்க பலர் இங்கு பிரார்த்தனை செய்வதாக கூறப்படுகிறது. கடன் தொல்லையால் அவதிப்படும் உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News January 26, 2026
பெரம்பலூர் மக்களே, மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!

1. பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது
2. இதில் மக்கள் கலந்து கொண்டு கிராமத்தின் செலவு / வரவு கணக்குகளை பார்வையிட்டு கேள்வி எழுப்பலாம்.
3. கூட்டத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து தீர்மானம் இயற்றினால், அதனை அரசு/அதிகாரிகள் நினைத்தால் கூட ரத்து செய்ய முடியாது.
4. மக்களுக்கு முழு அதிகாரத்தையும் வழங்கும் கிராம சபை கூட்டத்தில் மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!
News January 25, 2026
பெரம்பலூரில் வாகன பிரச்சாரத்தில் காவலருக்கு சிரமம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி கொடியசைத்து, வாகன பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செல்லக்கூடிய வாகனத்தில் உரிய இருக்கை வசதி இல்லாததால், பெண் போலீஸ் ஒருவர் அவதிப்பட்டு, துப்பாக்கியை பிடித்த நிலை உருவானது. பொதுமக்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களுக்கு அதிக வசதிகள் வழங்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
News January 25, 2026
பெரம்பலூர்: திருமணத்தடை நீக்கும் கோவில்!

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நீண்ட நாள் திருமணத்தடை உள்ளவர்கள், மூலவரான மதுரகாளியம்மனை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குச் இதை SHARE பண்ணுங்க!


