News December 18, 2025
பெரம்பலூர்: சிறப்பு மனு விசாரணை முகாம்

பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வுக்கான சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி ஆதர்ஷ் பசேரா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்கள் பெறப்பட்டன. மேலும் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி உத்தரவிட்டார்.
Similar News
News December 21, 2025
பெரம்பலூரில் நடைபெற்று இலவச கண் பரிசோதனை முகாம்

பெரம்பலூர் நகரில் இன்று (டிச.21) காலை 8-1 மணி வரை பெரம்பலூர் – எளம்பலூர் சாலையில் அமைந்துள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில், பெரம்பலூர் விக்டரி லயன்ஸ் சங்கம், பெரம்பலூர் டவுன் லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் சுமார் 300 மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
News December 21, 2025
பெரம்பலூர்: அம்மனுக்கு மார்கழி மாத சிறப்பு பூஜை

பெரம்பலூர் சங்குபேட்டையில், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் மார்கழி மாதத்தில் வரும் அம்மாவாசையை யொட்டி அம்மனுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், ஜவ்வாது, பன்னீர், உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் வன்ன மலர்களால் அலங்கரித்து, மாலை அணிவித்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகளுடன் மஹா தீபாராதனைகள் செய்து பொதுமக்கள் வழிபட்டனர்.
News December 21, 2025
பெரம்பலூர்: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

பெரம்பலூர் மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய பெயர்களை சேர்க்க வேண்டுமா?. இனி ஆன்லைன் மூலம் மாற்றிக் கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் <


