News December 22, 2025

பெரம்பலூர்: சாலை விபத்தில் முதியவர் பலி

image

தெரணி கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி (60) என்பவர் இருசக்கர வாகனத்தில் பாடலூர் சர்வீஸ் ரோடு வழியாக சென்று, தனியார் பைக் ஷோரூம் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கும்போது சென்னையில் இருந்து திருச்சியை நோக்கி வந்த கார் அவர் மீது மோதியுள்ளது. இதில் கலியமூர்த்தி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக திருச்சி போகும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

Similar News

News December 22, 2025

பெரம்பலூர்: 10 வருடத்திற்கு பின் கிடைத்த மின்சாரம்!

image

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா ஊத்தங்கால் கிராமத்தில், 10 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் பகுதியில் மின் இணைப்பு இல்லாமல் 10 வருடமாக இருளில் இருப்பதாக கடந்த அக்டோ.27 அன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவை பரிசீலனை செய்த மாவட்ட ஆட்சியர், மனு அளித்து 24 நாளில் மின் இணைப்பு வழங்கியதால் 10 குடும்பங்களும் ஆட்சியர் மிருணாளினிக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்தனர்.

News December 22, 2025

பெரம்பலூர்: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை!

image

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) உள்ள 764 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. வயது: 18-28
3. சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400
4. கல்வித் தகுதி: DEGREE / ITI / DIPLOMA
5. கடைசி தேதி: 01.01.2026
6. மேலும் தகவலுக்கு: CLICK<> HERE<<>>
7. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க

News December 22, 2025

பெரம்பலூர்: போலீஸ் அடித்தால் எப்படி புகார் அளிப்பது?

image

உங்கள் மீது எந்த தவறும் இல்லாமல் போலீசார் உங்களை அடித்தால், அவர் மீது மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் செயல்படும் Police Complaint Authority-ல் ஆதாரங்களுடன் நீங்கள் புகார் அளிக்கலாம். அதில் பயன் கிடைக்காத பட்சத்தில், <>hrcnet.nic.in என்ற இணையதளம்<<>> மூலமாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் உங்களால் புகார் அளிக்க முடியும். இதன் மூலம் கோர்ட், கேஸ் என்ற அலைச்சல் இல்லாமல் உங்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

error: Content is protected !!