News October 19, 2025

பெரம்பலூர்: சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

image

 பெரம்பலூர் வட்டம் சென்னை – திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் கைகாட்டி அருகில் நேற்று (18.10.2025) இரவு இருசக்கர வாகனத்தின் மீது மற்றொரு இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், காயம் அடைந்த ஒருவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி சென்று கொண்டிருக்கும் போது செல்லும் வழியில் பரிதாபமான உயிரிழந்தார்.

Similar News

News October 19, 2025

பெரம்பலூர்: கரண்ட் கட்டா? ஒரு Phone போதும்!

image

பெரம்பலூர் மக்களே மழை காலங்களில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், உங்களைத் தேடி லைன்மேன் வருவார். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 19, 2025

பெரம்பலூரில் இப்படியான இடங்களா!

image

1. சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் – சிலப்பதிகாரக் காவிய நாயகி கண்ணகி வரலாற்றுடன் தொடர்புபடுத்தி இங்கு அம்மனின் வரலாறு செவிவழிச் செய்தியாய்க் கூறப்பட்டு வருகிறது.
2.சாத்தனூர் கல்மரம்: சாத்தனூர் கல்லுருவாகிய அடிமர கல்வி மையம் என்று அழைக்கப்படுகிறது.
3. ரஞ்சன்குடி கோட்டை: இக்கோட்டை நஞ்சன்குடி கோட்டை என்றும் குறிப்பிடலாம். 1751ஆம் ஆண்டு நடைபெற்ற வாலிகொண்டா போரின் பிரதிபலிப்பாக அமைந்துள்ளது.

News October 19, 2025

பெரம்பலூர்: மழை பாதிப்புக்கு இதை தெரிஞ்சிக்கோங்க!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க மாநில உதவி – 1070, மாவட்ட உதவி – 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் கட்டயாம் உதவும். இதனை Save பண்ணிக்கோங்க.

error: Content is protected !!