News December 28, 2025
பெரம்பலூர்: குளத்தில் மூழ்கி பரிதாப பலி!

ஆலத்தூரை அடுத்த நாட்டார்மங்கலம் கிராமத்தில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரி குட்டையில் தேங்கி நிற்கும் தண்ணீரை குடிப்பதற்காக புள்ளிமான் ஒன்று வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த புள்ளிமான் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது.. தகவலின்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் மானை மீட்டு பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்.
Similar News
News December 28, 2025
பெரம்பலூர்: கோமாரி தடுப்பூசி சிறப்பு முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் பசு மாடு எருமை ஆடு உள்ளிட்ட அனைத்து கால்நடைகளுக்கும் பரவும் கோமாரி நோய்களை தடுப்பதற்கான தடுப்பூசி போடும் பணி மாவட்டத்தில் (29-12-2025) நாளை தொடங்கி (31-01-2026) வரை நடைபெற உள்ளது. இதில் நான்கு மாதம் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி போடலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அவர்கள் தெரிவித்துள்ளார்.
News December 28, 2025
பெரம்பலூர்: SBI வங்கியில் வேலை அறிவிப்பு!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள Specialist Cadre Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 996
3. வயது: 26-35
4. சம்பளம்: வருடம் ரூ.6,20 லட்சம்
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 05.01.2026
7.மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 28, 2025
பெரம்பலூர்: ஆணழகன் போட்டி

பெரம்பலூர் 2025 க்கான மிஸ்டர் ஆணழகன் (body building) போட்டி நேற்று பெரம்பலூர் தனியார் நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பாடி பில்டர்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர். தொடர்ந்து இந்த போட்டியில் வெற்றி பெற்ற பாடி பில்டர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


