News November 6, 2025
பெரம்பலூர்: குட்கா விற்பனை – ஒருவர் கைது

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் தனிப்படையினர் நடத்திய சோதனையில் சிறுவாச்சூர் கிராமத்தில் வசிக்கும் வெங்கடேஷ் (25) என்பவரின் வீட்டில் இருந்து அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை, சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்த நிலையில், போலீசார் வெங்கடேஷை கைது செய்து, அவரிடமிருந்து 106.822 கி.கி குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News February 2, 2026
பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்.02) பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுக்களை நேரில் வழங்கி தீர்வுகாணலாம். அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்கும் இந்நிகழ்வில், தகுதியுள்ள மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 2, 2026
பெரம்பலூர்: இன்று இங்கெல்லாம் மின்தடை!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், கழனிவாசல், மங்களமேடு, நன்னை ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (பிப்.02) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் மேலமாத்தூர், வெண்மணி, நல்லறிக்கை, திருமந்துறை, பெருமாத்தூர், வாலிகண்டபுரம் உள்ளிட்ட பகுதிகள் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!
News February 2, 2026
பெரம்பலூர்: மின்தடை அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டம், நன்னை துணைமின் நிலையத்தில் (02.02.2026) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பரவாய், கிழுமத்தூர், ஓலைபாடி, எழுமூர், நன்னை உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9:30 மணி முதல் பராமரிப்பு பணி முடிவடையும் வரை மின்தடை ஏற்படும் என துணை மின்செயர் பொறியாளர் தெரிவிக்கப்பட்டுள்ளது.


