News October 6, 2025

பெரம்பலூர்: குட்கா விற்பனை செய்தவர் கைது

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் போலீசார் நடத்திய சோதனையில் குன்னம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரவாய் கிராமத்தில் மருதமுத்து (32) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் மருதமுத்துவை கைது செய்து அவரிடமிருந்த 3 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர் என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 9, 2025

பெரம்பலூர்: இடைநிலை தேர்வுக்கான அட்டவணை வெளியீடு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான இரண்டாம் இடைநிலை தேர்வுக்கான அட்டவணையை பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு வருகின்ற (17-11-2025) திங்கள் கிழமை முதல் நடைபெறவுள்ளது என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

News November 9, 2025

பெரம்பலூர்: உங்கள் PAN கார்டு ரத்து செய்யப்படலாம்!

image

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <>eportal.incometax.gov.in<<>> என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News November 9, 2025

பெரம்பலூர்: இனி காவல் நிலையம் செல்ல வேண்டாம்!

image

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் உங்களை ஆபாசமாக திட்டுபவர்கள் மீது காவல் நிலையமே செல்லாமல் ஆன்லைன் வழியாக நீங்கள் புகார் அளிக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், <>www.cybercrime.gov.<<>>in என்ற இணையதளத்தில் ‘Register a Complaint’ என்ற பிரிவில் சென்று சம்பவம் தொடர்பான விவரங்களை அளித்து ஆன்லைன் வழியே எளிதாக நீங்கள் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!