News August 5, 2025
பெரம்பலூர்: கிராம உதவியாளர் பணி-APPLY NOW

வேப்பந்தட்டை, பெரம்பலூர், குன்னம், ஆலத்தூர் உள்ளிட்ட தாலுக்காக்களுக்கு கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு <
Similar News
News September 20, 2025
பெரம்பலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

பெரம்பலூர் மக்களே இலவச தையல் இயந்திரம் வேண்டுமா? தமிழக அரசு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக தையல் இயந்திரம் வழங்கி வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க எந்த ஒரு கல்வி தகுதியும் இல்லை. விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். உதவும் உள்ளம் கொண்ட நாகை மக்களே இதனை SHARE பண்ணுங்க.
News September 20, 2025
Breaking: பெரம்பலூர் மக்களிடம் மன்னிப்பு கேட்ட விஜய்

தவெக தலைவர் விஜய் தற்போது தமிழகத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாக திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பரப்புரையை தொடங்குவதாக விஜய் அறிவித்த நிலையில் திருச்சி மற்றும் அரியலூரில் மட்டுமே பரப்புரை மேற்கொள்ள முடிந்தது. பெரம்பலூர் மாவட்டத்திற்கு செல்ல முடியாத காரணத்தால் இன்று (செப்.,20) நாகையில் நடந்த பரப்புரையில் விஜய் பெரம்பலூர் மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.
News September 20, 2025
பெரம்பலூர்: 10-ஆம் வகுப்பு படித்த போலி டாக்டர் கைது

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் ஒருவர் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு 30 ஆண்டுகளாக போலி ஆங்கில மருத்துவராக செயல்பட்டு வந்தவரை பெரம்பலூர் போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர். அப்போது கைது செய்த அவரிடம் இருந்து மருத்துவம் பார்த்த உபகரணங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.