News March 18, 2024
பெரம்பலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

வருகின்ற பாராளுமன்ற தேர்தல் 2024 -ல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்களை அதிக அளவில் ஈடுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த தேர்தல் பாதுகாப்பு பணிபுரிய விருப்பமுள்ள 65 வயதிற்குட்பட்ட நல்ல உடல் திறனுள்ள முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், அரியலூர் என்ற அலுவலகத்தை நேரில் அணுகலாம் என ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 31, 2025
பெரம்பலூர்: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!
News October 31, 2025
பெரம்பலூர்: இளைஞர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு!

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 1.10.2025 உடன் தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் துவங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் இளைஞர்கள், தங்களின் வேலை வாய்ப்பு அடையாள அட்டையினை காண்பித்து பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
News October 31, 2025
பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

பெரம்பலூர் மாவட்டத்தில் பருவ மழை காலங்களில் பொதுமக்கள் வளர்க்கும் தங்களது கால்நடைகளை மின் கம்பிகள் மற்றும் மின்கம்பி அருகே கட்ட வேண்டாம் எனவும், நோய்க் கிருமி தொற்றுகள் பரவாத அளவிற்கு கிருமி கட்டுப்பாட்டை உறுதி செய்ய வேண்டும் எனவும், எல்லா நேரத்திலும் சுத்தமான நீரை பருக வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவுறுத்தியுள்ளார்.


