News January 2, 2026

பெரம்பலூர் கலெக்டர் கலந்தாய்வுக் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் செயல்படும், பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் வாயிலாக, குழந்தை திருமணம் இல்லாத மாவட்டத்தை உருவாக்குவோம் என்ற தலைப்பில் மாவட்ட, வட்ட, கிராம அளவிலான குழந்தை திருமண தடுப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான கலந்தாய்வு கூட்டம் ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமையில் நடைபெற்றது.

Similar News

News January 11, 2026

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் கிராமப்புறங்களில் பாரத் நெட் திட்டத்தின் கீழ், உயா்தர இணைய சேவைகளை வழங்குவதற்கு, ஆா்வமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ந.மிருணாளினி தெரிவித்துள்ளாா். ஆா்வமுள்ளவா்கள் இணையதளம் மூலம் ஜன.14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு, 044 -24965595 என்ற எண்ணில் தொடா்புகொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 11, 2026

பெரம்பலூர்: பாதி வழியில் பெட்ரோல் காலியா?

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘<>Fuel@Call<<>>’ என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிப்பொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News January 11, 2026

பெரம்பலூர்: நாளை இங்கெல்லாம் மின்தடை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்கூன் மற்றும் கைகளத்தூர் துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.12) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் அடைக்கம்பட்டி, அம்மாபாளையம், மேலப்புலியூர், அய்யனார்பாளையம், வெள்ளுவாடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!