News October 19, 2025
பெரம்பலூர்: கரண்ட் கட்டா? ஒரு Phone போதும்!

பெரம்பலூர் மக்களே மழை காலங்களில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், உங்களைத் தேடி லைன்மேன் வருவார். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News October 19, 2025
பெரம்பலூர்: மின்சார உதவி எண் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகின்றன. மழையின் காரணமாக ஆங்காங்கே உள்ள மின்கம்பங்கள் விழுந்தும், மின் கம்பிகள் அறுந்து விழுந்தும் காணப்பட்டால் எச்சரிக்கையுடன் அதை கையாண்டு தொடாமல் மின்சாரத் துறையின் கட்டணமில்லா (9498794987) என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
News October 19, 2025
பெரம்பலூர்: சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

பெரம்பலூர் வட்டம் சென்னை – திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் கைகாட்டி அருகில் நேற்று (18.10.2025) இரவு இருசக்கர வாகனத்தின் மீது மற்றொரு இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், காயம் அடைந்த ஒருவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி சென்று கொண்டிருக்கும் போது செல்லும் வழியில் பரிதாபமான உயிரிழந்தார்.
News October 19, 2025
பெரம்பலூரில் இப்படியான இடங்களா!

1. சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் – சிலப்பதிகாரக் காவிய நாயகி கண்ணகி வரலாற்றுடன் தொடர்புபடுத்தி இங்கு அம்மனின் வரலாறு செவிவழிச் செய்தியாய்க் கூறப்பட்டு வருகிறது.
2.சாத்தனூர் கல்மரம்: சாத்தனூர் கல்லுருவாகிய அடிமர கல்வி மையம் என்று அழைக்கப்படுகிறது.
3. ரஞ்சன்குடி கோட்டை: இக்கோட்டை நஞ்சன்குடி கோட்டை என்றும் குறிப்பிடலாம். 1751ஆம் ஆண்டு நடைபெற்ற வாலிகொண்டா போரின் பிரதிபலிப்பாக அமைந்துள்ளது.