News September 1, 2025

பெரம்பலூர்: ஒரு மெசேஜ் போதும், உடனடி புகார் அளிக்கலாம்!

image

உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், பெரம்பலூர் மாவட்ட மக்கள் ‘94861-11912’ என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

Similar News

News September 8, 2025

மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 287 மனுக்கள்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் மிருணாளினி தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே கலெக்டர் சென்று கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 287 மனுக்களை பொதுமக்களிடமிருந்து கலெக்டர் பெற்றுக்கொண்டார்.

News September 8, 2025

பெரம்பலூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பெரம்பலூர் மக்களே இதற்கு விண்ணபிக்க <>அதிகாரப்பூர்வ இணையதளத்தில்<<>>, Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும், உங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களிளும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News September 8, 2025

பெரம்பலூர்: நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

பெரம்பலூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மின்வாரிய கோட்ட, மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் 9.9.2025 நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது . இந்த கூட்டத்தில் பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்துகொண்டு தங்களுடைய கோரிக்கைகள் , குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம் என
பெரம்பலூர் மின்கோட்ட செயற்பொறியாளர் அசோக் குமார் தகவல்.

error: Content is protected !!