News March 21, 2024

பெரம்பலூர்: ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் போட்டி

image

2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த வேட்பாளர்களின் பட்டியல் சற்றுமுன் வெளியானது. பெரம்பலூர் தொகுதியில் பாஜக கூட்டணி கட்சியை சேர்ந்த ஐஜேக கட்சி தலைவர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். நேரடியாக திமுக வேட்பாளர் அருண் நேருவை எதிர்த்து போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 17, 2025

மருத்துவமனையில் சேர்த்தால் ரூ.10,000-கலெக்டர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை விபத்தில் காயமடைந்தவர்களின் உயிரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கும் மனிதநேய மிக்கவர்களுக்கு, மத்திய அரசு வழங்கும் ரூ.5 ஆயிரத்துடன், மாநில அரசின் பங்களிப்பாக சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து கூடுதலாக ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.10 ஆயிரமாக வழங்கப்படும் என்று கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

News April 17, 2025

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

image

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி மற்றும் நெகிழி கழிவு மேலாண்மையை திறம்பட செயல்படுத்துதல் தொடர்பாக, வணிக உரிமையாளர்கள் மற்றும் சிறு குறு நடுத்தர நிறுவன பிரதிநிதிகளுக்கான பயிலரங்கம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நாளை காலை 10 மணிக்கு தனலட்சுமி சீனிவாசன் ஹோட்டலில் நடைபெற உள்ளதென மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 16, 2025

பெரம்பலூர்: கோடை காலத்தில் மக்கள் செய்யக்கூடாதவை

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பாக, பொதுமக்கள் கோடை காலத்தில் எவையெல்லாம் செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.  அதில், நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும், டீ, காபி, ஆல்கஹால் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்கவும் எனவும், மற்றும் வெற்றுக்காலுடன் வெயிலில் நடக்க வேண்டாம், . மேலும் முக்கியமாக குழந்தைகளை வாகனங்களில் தனியாக விட்டு செல்லாதீர்கள் என தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!