News January 13, 2025
பெரம்பலூர்: எலக்ட்ரானிக் கடையில் திருட்டு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் காரியானூரைச் சேர்ந்த வெங்கடேசன்(35) என்பவர் பெரம்பலூர் அருகே கோனேரிப்பாளையத்தில் எலக்ட்ரானிக் பொருள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடையின் பூட்டை உடைத்து நேற்றிரவு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் டிவி,கிரைன்டர்,மிக்ஸி மற்றும் ரூ.10,000 பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
Similar News
News December 9, 2025
பெரம்பலூர்: பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் “சமூக நீதிக்கான தந்தை பெரியார்” விருது பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். இந்த விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களது விண்ணப்பத்தை, உரிய ஆவணங்களுடன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கு 18.12.2025-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பிரிவைச் சார்ந்த மாணவர்கள், பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். வருகிற டிச.31ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04328-296565 என்ற எண்ணை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 8, 2025
பெரம்பலூர்: உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (08.12.2025) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், சவுதி அரேபியா நாட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இறப்பு இழப்பீட்டுத் தொகையாக ரூ.3.41 லட்சத்தினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி வழங்கினார். இந்நிகழ்வில் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.


