News December 5, 2025
பெரம்பலூர் எம்எல்ஏ-வுக்கு அமைச்சர் அழைப்பு

அரியலூர் மாவட்ட திமுக சார்பாக அரியலூரில் புதிய கலைஞர் அறிவாலயம் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா இன்று (05-12-2025) நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பிதழை நேற்று பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரனிடம் அமைச்சர் சிவசங்கர் வழங்கி அழைப்பு விடுத்தார்.
Similar News
News December 5, 2025
பெரம்பலூர் மாவட்டத்தில் நிரம்பி வழியும் ஏரிகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 70-க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தின் பச்சை மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, பெரம்பலூர் அருகே அமைந்துள்ள குரும்பலூர் ஏரி முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. இதுபோல மாவட்டத்தில் அமைந்துள்ள விசுவக்குடி, கொட்டரை, மருதையாறு உள்ளிட்ட 7 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.
News December 5, 2025
பெரம்பலூரில் வருவாய்துறை சங்கம் மறியல் போராட்டம்

பெரம்பலூர் மாவட்ட வருவாய்த்துறை சங்கம் சார்பில், நேற்று (டிச.04) மாவட்ட ஆட்சியர் நுழைவு வாயில் மற்றும் பாலக்கரை ரவுண்டான அருகில் தேர்தல் வாக்குறுதியில் கூறிய, 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மறியல் செய்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்பாட்டத்தில், வருவாய்துறை சங்க தலைவர் பாரதிவளவன், செயலாளர் சரவணன் மற்றும் மாவட்டப் பொருளாளர் குமரிஆனந்தன் ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது.
News December 5, 2025
பெரம்பலூர்: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு…

பெரம்பலூர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில்<


