News October 25, 2025

பெரம்பலூர்: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

பெரம்பலூர் தனியார் டயர் தொழிற்சாலை கம்பெனியில் பணிபுரியும், விழுப்புரம் மாவட்டம் பனையபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் (26) என்ற இளைஞர், பெரம்பலூர் நான்கு ரோடு மின் நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பல்வேறு கோணங்களில் பெரம்பலூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News October 25, 2025

ஆலத்தூர்: டிரான்ஸ்பார்ம் உதிரி பாகம் திருட்டு

image

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் சுற்று வட்டாரப்பகுதிகளுக்கு கரண்ட் கிடைக்கவில்லை என பொதுமக்கள் புகாரின் பேரில், மின்வாரிய ஊழியர்கள், மின்மாற்றியில் பழுது உள்ளதா? என பார்க்க சென்றனர். அப்போது, அந்த டிரான்ஸ்பார்மரின் மேல் பகுதி கழட்டப்பட்டு உள்ளே இருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 18 காப்பர் காயில் சிலிண்டர்கள் திருடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News October 25, 2025

பெரம்பலூர்: B.E முடித்தவர்களுக்கு அரசு வேலை!

image

Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 340 Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: B.E / B.Tech / B.Sc Engineering Degree
3. சம்பளம்: ரூ.40,000 – 1,40,000/-
4. வயது வரம்பு: 21-25
5. கடைசி தேதி : 14.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [CLICK <>HERE<<>>]
7.அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க!

News October 25, 2025

பெரம்பலூர்: தேசிய பெண் குழந்தைகள் விருது பெற வாய்ப்பு

image

தமிழக அரசால் 2025-26-ம் ஆண்டிற்கு வழங்கப்படும் தேசிய பெண் குழந்தைகள் விருதுக்கு தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க தமிழக அரசின் awards.tn.gov.in என்ற இணையதளத்தில் உரிய விவரங்களுடன் நவம்பர் 29-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!