News October 29, 2025
பெரம்பலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (அக்.28) இரவு 10 மணி முதல் இன்று (அக்.29) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
Similar News
News October 29, 2025
பெரம்பலூர்: உங்க பெயரை மாற்ற சூப்பர் சான்ஸ்!

தங்களது பெயரை மாற்றம் செய்ய விரும்புவோருக்கு புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க இங்கு <
News October 29, 2025
பெரம்பலூர்: குடும்பத்துடன் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில், உச்சநீதிமன்ற மேல் முறையீடு வழக்கை கைவிட வேண்டும்; நடைமுறையில் இருந்து பறிக்கப்பட்ட செவிலியர் கண்காணிப்பாளர் தரம் 3 ஏ.என்.எஸ் பணியிடங்களை மீண்டும் உருவாக்கிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் தங்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
News October 29, 2025
பெரம்பலூர்: தொடர் டிரான்ஸ்பார்மர் திருட்டு!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்கு உட்பட்ட அத்தியூர் மற்றும் ஆடுதுறை பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்கள் டிரான்ஸ்பார்மர் பெட்டியில் உள்ள காப்பர் காயில் மற்றும் ஆயிலை திருடி சென்றுள்ளனர். இதுமட்டும் அல்லாது பெரம்பலூர் மாவட்டம் பகுதியில் பல்வேறு இடங்களில் இதே போல திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


