News January 21, 2026

பெரம்பலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூா் மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டதற்குப் பிறகு, பெரம்பலூா் மற்றும் குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 11,650 விண்ணப்பங்களும், திருத்த 8,061 விண்ணப்பங்களும், நீக்க 200 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. எனவே, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள வாக்காளா்கள் கால நீட்டிப்பை ஜன.31 வரை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News January 28, 2026

பெரம்பலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை

image

பெரம்பலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது <>இங்கே கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 28, 2026

பெரம்பலூர்: கிணற்றில் விழுந்த மான் பாலி

image

பெரம்பலூர் மாவட்டம் மருதடி மலைப்பகுதியிலிருந்து தண்ணீர் தேடி வந்த மான் ஒன்று, வயல் பகுதியில் சுற்றித் திரிந்த நாய்கள் விரட்டியதில் மிரண்டு, அருகிலிருந்த விவசாயக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறை அலுவலர்கள் மானின் உடலை மீட்டு, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 28, 2026

பெரம்பலூர்: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

image

பெரம்பலூர் மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.’

error: Content is protected !!