News December 18, 2025

பெரம்பலூர்: ஆட்சியரகத்தில் கடன் வழங்கும் முகாம்

image

பெரம்பலூர் மாவட்ட தொழில் மையம் மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில், பொதுமக்களுக்கு கடன் வழங்கும் முகாம் இன்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மேலும் மாவட்ட ஆட்சியார் மிருணாளினி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், 34 பயனாளிகளுக்கு ரூ.1.16 கோடி மதிப்பில் கடனுதவிகளை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பல்வேறு முன்னோடி வங்கிகள் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News December 20, 2025

பெரம்பலூர்: விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆலத்தூர் ஒன்றிய அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தெரணி கிராமத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் மகாத்மா காந்தியின் பெயரை மாற்றி புதிய சட்டம் இயற்றி 100 நாள் வேலை திட்டத்தை சீர்குலைவு செய்யும் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

News December 20, 2025

பெரம்பலூர்: SIR பட்டியலில் உங்க பெயர் இருக்கா?

image

தமிழகம் முழுவதும் SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் 49,548 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உங்களது பெயர் SIR பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க <>electoralsearch.eci.gov.in என்ற இணையதளத்தில்<<>> சென்று உங்களது வாக்காளர் அட்டை எண்ணை பதிவிட்டு எளிதாக தெரிந்து கொள்ளலாம். SHARE NOW!

News December 20, 2025

பெரம்பலூர்: விருது மற்றும் ரூ.1.50 லட்சம் பெற வாய்ப்பு

image

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம், ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி சா்வதேச மகளிர் தினத்தன்று, பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்கும் மகளிருக்கு ஒளவையார் விருது மற்றும் ரூ.1.50 லட்சம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழக அரசால் 2025-2026 ஆம் ஆண்டுக்கு வழங்கப்படும் ஒளவையார் விருதுபெற, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர், மாவட்ட ஆட்சியரகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!