News November 16, 2025
பெரம்பலூர்: ஆசிரியர் தகுதித் தேர்வு!

பெரம்பலூர் (நவம்16) நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தாள்-2 தகுதித் தேர்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை பெரம்பலூரில் பல்வேறு தேர்வு மையங்களில் நடைப்பெறுகிறது. பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற அடிப்படையில், நடப்பு ஆண்டுக்காண ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.
Similar News
News November 16, 2025
பெரம்பலூர்: பட்டதாரி இளைஞர் தற்கொலை

பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கோபி (32), எம்.பி.ஏ பட்டதாரியான இவர் குடிமைப் பணிக்கான தேர்வு எழுதியுள்ளார். இந்த போட்டித் தேர்வில் அவர் தேர்ச்சி பெறாததல் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News November 16, 2025
பெரம்பலுர்: ரூ.45,000 சம்பளத்தில் பேங்க் வேலை!

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 21 – 30 வயதுக்குட்பட்ட நபர்கள்,<
News November 16, 2025
பெரம்பலுர்: மின் தடை அறிவிப்பு!

மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெளியிட்ட செய்தியில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் (நவ.17) நடைபெறுகிறது. இதனால் குரும்பலூர், பாளையம், புதுஆத்தூர், ஈச்சம்பட்டி, மூலக்காடு, லாடபுரம், அம்மாபாளை யம், களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், புதுஅம்மாபாளையம், அடைக்கம்பட்டி, சிறுவயலூர், டி.களத்தூர்பிரிவு சாலை, குரூர், மாவிலிங்கை உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் வினியோகம் இருக்காது.


