News September 8, 2025
பெரம்பலூர் ஆசிரியர்களுக்கு விருது

முத்தமிழ் கலைகளின் இலக்கிய சங்கமம் மற்றும் தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை சார்பில் கல்வித் தென்றல் விருது வழங்கும் நிகழ்வு இன்று திருச்சியில் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் பணி புரியும் ஆசிரியர்கள் கார்த்திகேயன், மாயகிருஷ்ணன், கோபால் ஆகியோர் தலைமை ஆசிரியராகவும் ராஜமாணிக்கம், ராஜா, துரை ஆகியோர் பட்டதாரி ஆசிரியராகவும் ஜோதிவேல் ஆகியோருக்கு சிறந்த ஆசிரியர் விருதுகள் வழங்கப்பட்டது.
Similar News
News September 14, 2025
பெரம்பலூர் மக்களிடம் வருத்தம் தெரிவித்த விஜய்!

பெரம்பலூரில் மாவட்டட்தில் தவெக தலைவர் விஜய் நேற்று மக்களை சந்திக்க இருந்த நிலையில், பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் விஜய் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இன்னொரு நாள் பெரம்பலூர் வருவதென முடிவெடுக்க வேண்டிய நிலை உண்டானது. பேரன்பு கொண்டு காத்திருந்த பெரம்பலூர் மக்களிடம் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன், நிச்சயமாக உங்களைச் சந்திக்க மீண்டும் வருவேன் என தெரிவித்துள்ளார்.
News September 14, 2025
பெரம்பலூர் மக்களே.. உங்கள் பெயரில் இத்தனை SIM -ஆ?

பெரம்பலூர் மக்களே… உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால் மத்திய அரசின் சஞ்சார்சாத்தி இணையம் மூலமாக உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். <
News September 14, 2025
பெரம்பலூர் மக்களே.. வங்கியில் வேலை வாய்ப்பு!

பெரம்பலூர் மக்களே Bank வேலைக்கு போக ஆசை இருக்கா? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாகவுள்ள 127 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது.
✅துறை: IOB
✅பணி: Specialist Officer
✅கல்வி தகுதி: B.E./B.Tech, MBA, M.Sc,
✅சம்பளம்:64,820
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
✅வயது வரம்பு: 24 முதல் 40 வரை
✅கடைசி தேதி: 03.10.2025
உங்கள் உறவினர்களுக்கும் SHARE செய்து Bank வேலைக்கு போக சொல்லுங்க!